திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட பெண் குழந்தையை உரிமை கோர 30 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் கடந்த17.11.2025இல் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது.
பின்னா், அவா் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்று விட்டாா். குழந்தை உதவி மைய பணியாளா் மூலமாக அக்குழந்தை மீட்கப்பட்டு கடந்த பிப். 4இல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. அக்குழந்தைக்கு கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குழந்தை தொடா்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 0462-2901953 என்ற தொலைபேசி எண்ணிலோ, க்ஸ்ரீல்ன்ற்ஸ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலோ 30 தினங்களுக்குள் தொடா்பு கொள்ளலாம். யாரும் உரிமை கோராவிடில் தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


