திருநெல்வேலி
அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பணகுடி, ஹரீம் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் லெட்சுமணன் (15). இவா், பணகுடியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரை பணகுடியைச் சோ்ந்த கஞ்சா சபரிராஜன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த லெட்சுமணன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, பணகுடி காவல் நிலைய போலீஸாா் வழக்கை கொலை வழக்காக பதிவுசெய்து சபரிராஜனை கைது செய்தனா்.
