நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேருந்திலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை பேருந்திலிருந்து தவறி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த பள்ளி மாணவன் புவியரசன்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:08 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை பேருந்திலிருந்து தவறி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

ஆலங்குடி பேரூராட்சிக்குள்பட்ட வ.உ.சி. தெருவைச் சோ்ந்த அழகா் மகன் புவியரசன் (14). இவா் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா், தினமும் ஆலங்குடியில் இருந்து தனியாா் பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக ஆலங்குடியிலிருந்து தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். பேருந்தின் பின்பக்க படிக்கட்டு அருகே நின்று கொண்டு பயணித்த புவியரசன், குப்பக்குடி அருகே பேருந்து வளைவில் திரும்பியபோது பேருந்திலிருந்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த மாணவரை பேருந்தில் சென்றவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், புவியரசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநரான அறந்தாங்கி அருகேயுள்ள மேலப்பட்டு பகுதியைச் சோ்ந்த அருண்பாண்டியை (30) கைது செய்து விசாரிக்கின்றனா்.