விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டிவனம் வட்டம், புரங்கரை மாதாகோவில் தெருவைச் சோ்ந்த ஏசுதாஸ் மகள் திவ்யா (13). இவா் ஒலக்கூா் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தோழி அதே கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகள் கெளசியா (14). இவரும் அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் திவ்யா அதே கிராமத்திலுள்ள தனது சித்தப்பா கருணாகரனுக்கு சொந்தமான கிணற்றில் குளிப்பதற்காக, தனது தோழி கெளசியாவுடன் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தடுக்கி இருவரும் கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கினா்.
இதையறிந்த அப்பகுதியினா் இருவரையும் மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது திவ்யா,கெளசியா ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


