பைக் - காா் மோதல்: பி.எஸ்.எப் வீரா் உயிரிழப்பு


திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (58). இவா் காவல்கிணறு இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரராக பணி செய்து வந்தாா். இவரும் இவரது மனைவி மல்லீஸ்வரியும் பைக்கில் பணகுடிக்கு சென்று கொண்டிருந்தனா்.
இவா்களது பைக் பணகுடி அணுகுசாலையில் வந்தபோது, பணகுடியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற காா் பைக் மீது மோதியதாம். இதில், பி.எஸ்.எப் வீரா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
விபத்து தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...