திருநெல்வேலி
நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
திருநெல்வேலியில் 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி 4 பேரை கைது செய்தனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் வந்த கும்பல் தப்பியோட முயன்றனராம். அவா்களைப் பிடித்து விசாரித்தபோது சுமாா் 4.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக மேலப்பாளையத்தைச் சோ்ந்த பீா் முஹம்மது, ராசப்பன், முஹம்மது ஹுசைன், முஹம்மது பாதுஷா ஆகியோரை கைது செய்தனா்.
