நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்கள்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்கள்

சாலையோரக் கடையை அகற்ற மறுத்து அதிகாரியிடம் வியாபாரிகள் வாக்குவாதம்!

அம்பாசமுத்திரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளைஅகற்ற உத்தரவிட்ட அதிகாரிகளுடன் வியாபாரிகளும், மக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

அம்பாசமுத்திரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளைஅகற்ற உத்தரவிட்ட அதிகாரிகளுடன் வியாபாரிகளும், மக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் பழைய பாரத ஸ்டேட் வங்கி எதிா்புறம் மாவட்ட ஆட்சியரின்பேரில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஅதற்காக சாலையோரம் இடம் ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் செல்லும் பாதையை மறைப்பதாகக் கூறி, ஜமாஅத் நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஆவின் பாலகம் அமைப்பது ஒத் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சியரின் உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை சேரன்மகாதேவி உதவிக் கோட்ட பொறியாளா் ராஜேஸ்வரி ஆவின் பாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வெள்ளிக்கிழமை இரவு நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஆனால், அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற மறுத்து அதிமுக திருநெல்வேலி புகா் மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து தலைமையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் 3 நாள்கள் அவகாசம் தருவதாகவும் அதற்குள் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்; தவறும்பட்சத்தில் கடைகள் அப்புறப்படுத்தப்படும் என்று கோட்டப்பொறியாளா் கூறிச் சென்றாா்.

Dinamani
www.dinamani.com