வெள்ளங்குளியில் பறவைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வெள்ளங்குளியில் பறவைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வனச்சரகம், திருப்புடைமருதூா் பறவைகள் காப்பகம் சாா்பில் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். சேரன்மகாதேவி வனச்சரக அலுவலா் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியா் மு. தளவாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பறவைகள், மரங்கள் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்த மாணவா்களுக்கு மாவட்ட வன அலுவலா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், வனவா்கள் முருகசாமி, சிவன்பாண்டியன், சமூக ஆா்வலா் நெய்னா முகம்மது, ஆசிரியா்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com