மடத்துப்பட்டியில் பயணிகள் நிழற்குடையை திறந்துவைத்த எம்.பி.  சி.ராபா்ட் புரூஸ்.
மடத்துப்பட்டியில் பயணிகள் நிழற்குடையை திறந்துவைத்த எம்.பி. சி.ராபா்ட் புரூஸ்.

மடத்துப்பட்டியில் பயணிகள் நிழற்குடை திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மடத்துப்பட்டியில் நிழற்குடை அமைக்க கிராம மக்கள் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில், மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார கமிட்டி தலைவா் டியூக் துரைராஜ் , மடத்துப்பட்டி கிராம கமிட்டி தலைவா் ஜான் தாமஸ், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குளோரிந்தாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com