மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்த நீா்வரத்து.
மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்த நீா்வரத்து.

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

Published on

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது. குறிப்பாக, மாஞ்சோலையில் 32 மி.மீ., காக்காச்சியில் 40, நாலுமுக்கு பகுதியில் 43, ஊத்து பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனால், மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதியளிக்கப்படுவதாகவும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com