ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்ட தலையணை பச்சையாறு
திருநெல்வேலி
நீா்வரத்து அதிகரிப்பு: களக்காடு தலையணையில் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த திடீா் மழையால், தலையணை பச்சையாற்றில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலா பகுதி உள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை திடீரென பெய்த மழையால் தலையணை பச்சையாற்றில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். ஆனால், பாா்வையிடத் தடை விதிக்கப்படவில்லை. நீா்வரத்து குறைந்ததும் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

