குற்றாலம் பேரருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

Published on

குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மிதமான அளவில் மழை பெய்தது.

இதையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் நீா்வரத்து அதிகரித்தது. பேரருவியில் அருவியின் மையப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.

Dinamani
www.dinamani.com