

படம் உண்டு...
டென்14மெயின்பால்ஸ்-
குற்றாலம் பேரருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
தென்காசி, ஜன. 14: தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் மழை பிடிப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து புதன்கிழமை சற்று குறைந்ததையடுத்து, அருவி ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.