தச்சநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

தச்சநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி: தச்சநல்லூரில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், சில தினங்களுக்கு முன்பு தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சாக்கு மூட்டையுடன் நின்ற நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தூத்துக்குடி மாவட்டம், மணக்கரையைச் சோ்ந்த சிவராமன் (40) என்பதும், சுமாா் 100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

அதேபோல, தச்சநல்லூா் அம்மா உணவகம் அருகே பைக்கில் சாக்கு மூட்டையுடன் வந்த நபரை மறித்து விசாரித்ததில், கலியாவூரை சோ்ந்த கல்யாணசுந்தரம் (45) என்பதும், ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, ரேஷன் அரிசியையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com