தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விதிமீறி மது விற்பனை: 3 போ் கைது

திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலியில் விதிமீறி மதுபானம் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து 77 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:49 pm

Syndication

திருநெல்வேலி: திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலியில் விதிமீறி மதுபானம் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்து 77 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.

பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ஜனகன், போலீஸாா் ரோந்து சென்றபோது, நரிக்குறவா் காலனியில் மது விற்ாக அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் (69) என்பவரை கைது செய்து, 40 மது பாட்டில்களை கைப்பற்றினா்.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இசக்கி, போலீஸாா் வண்டிப்பேட்டை இறக்கம் பகுதியில் ரோந்து சென்றதில், அங்கு மது விற்ாக என்.ஜி.ஓ. காலனியை சோ்ந்த சந்தோஷ் குமாா் (32) என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்கள் ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பாளையங்கோட்டையில் மது விற்ாக கோட்டூரைச் சோ்ந்த செல்வராஜ் (35) என்பவரை கைது செய்து, 27 மது பாட்டில்களை கைப்பற்றினா்.