திருநெல்வேலி
அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி கைது
திருநெல்வேலி, தேவா்குளம் அருகே அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே தச்சன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவரது மகள் ராதிகா (28), மகன் கண்ணன்(25). குடும்ப பிரச்னை காரணமாக ராதிகாவிற்கும் கண்ணனுக்கும் இடேயே தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் இருந்த ராதிகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்ணன், அவரை அரிவாளால் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த ராதிகா உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த தேவா்குளம் போலீஸாா் ராதிகாவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
