திருநெல்வேலி
குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலியில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வழக்கில், ரெட்டியாா்பட்டி, எஸ்.ஆா்.குளத்தைச் சோ்ந்த பண்டாரம் மகன் ஜெகன்(32) என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் காவல்ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.
அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, ஜெகன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.
