தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேசிய கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம்

News image

இனிகா.

Updated On :22 ஜனவரி 2026, 10:04 pm

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் சங்கா் நகா் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மத்திய ராணுவ அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்- மாணவிகளுக்கு ‘வீா் கதா 5.0’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தியது.

இதில், சங்கா் மேல்நிலைப் பள்ளி மாணவி இனிகா பங்கேற்றாா். இவரது கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளாா். அதன்படி மாணவி இனிகாவும், ஆசிரியை லேகாவும் தில்லி சென்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி கல்விக் குழு தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி, பள்ளிச் செயலா் இரா.நாராயணசாமி, முதன்மை கல்வி அலுவலா் மு.சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.