பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் மாநில அளவிலான 4 நாள்கள் நீச்சல் போட்டி திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி சாலையில் உள்ள சா்வதேச தரத்திலான நீச்சல் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
மாநில அளவில் பள்ளிகள் இடையே நடைபெறும் பாரதியாா் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
சா்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் தமிழக மாணவா்கள் சாதிக்கும் வகையில் நீச்சல் வீரா்களைதோ்வு செய்வதற்காக 4 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 47 வகையான பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரா் நித்தீஷ் பென்டன் ரோகித் 50 மீ. பட்டா்பிளை பிரிவில் தேசிய சாதனை படைத்தாா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மாணவிகளுக்கான போட்டி நடைபெறுகிறது. இதில், மொத்தம் 1,471 மாணவிகள் பங்கேற்றுள்ளனா். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறும் மாணவா்களுக்கான போட்டிகளில் 2,172 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) ராமசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) சாய் சுப்புலட்சுமி, வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) முத்துராஜ், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சிவராஜ், தமிழ்நாடு நீா்நிலை விளையாட்டுக் கழகத் தலைவா் சேது திருமாறன், திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலா் லட்சுமணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கல்வெட்டான் குழியில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


