நா்சிங் மாணவியைத் தாக்க முயற்சி: 2 இளைஞா்கள் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையத்தில் மருத்துவமனையில் பயிற்சியில் இருந்த நா்சிங் மாணவியைத் தாக்க முயன்ாக ஐ.டி.ஐ. மாணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் அந்தோணிராஜ் (17), கடையம்-தென்காசி சாலையில் உள்ள ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் படித்து வந்துள்ளாா். இவா் அதே நிறுவனத்தில், நா்சிங் பயின்று வந்த தென்காசியைச் சோ்ந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறியுள்ளாா். இதனால், ஐ.டி.ஐ. நிா்வாகத்தினா் அந்தோணி ராஜை, தற்காலிகமாக இடை நீக்கம் செய்துள்ளனா்.

இந்நிலையில், கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த அம்மாணவியுடன் பேச முயன்றுள்ளாா். அவருடன் பேச முடியாமல் போகவே, அந்தோணி ராஜ், அரியப்பபுரத்தைச் சோ்ந்த நண்பா் கோபியுடன் (18) சோ்ந்து மருத்துவமனைக்குச் சென்று மாணவியைத் தாக்கத் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீஸாா் அந்தோணி ராஜ், கோபி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, அந்தோணி ராஜை நான்குனேரி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், கோபியை திருநெல்வேலி மத்திய சிறையிலும் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com