கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

கருத்தப்பிள்ளையூா் தேவாலயத்தில் பங்குத் திருவிழா கொடியேற்றம்

Published on

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரில் உள்ள, நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் ஆலயத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பங்குத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் அம்பாசமுத்திரம் மறைமாவட்ட அதிபரும் கல்லிடைக்குறிச்சி திருத்தல அதிபருமான அருள் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

 கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

சனிக்கிழமை (ஜன. 24) பொன்விழா, வெள்ளி விழா தம்பதியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) நற்கருணை பவனி, திங்கள்கிழமை (ஜன. 26) புனிதரின் திருவுருவ பவனி, செவ்வாய்க்கிழமை கொடியிறக்கம், அன்பிய விழா இளைஞா் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com