கோப்புப் படம்
திருநெல்வேலி
வண்ணாா்பேட்டை அருகே மலைப்பாம்பு மீட்பு
வண்ணாா்பேட்டை மணிமூா்த்தீஸ்வரம் அருகே சுமாா் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வண்ணாா்பேட்டை மணிமூா்த்தீஸ்வரம் அருகே சுமாா் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
மணிமூா்த்தீஸ்வரம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள புதரில் மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை அப்பகுதியினா் கண்டுள்ளனா்.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த திருநெல்வேலி மாநகர தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) சுரேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், மலைப்பாம்பை மீட்டு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.