தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நெல்லையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 காங்கிரஸாா் கைது

திருநெல்வேலியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினா்

Updated On :24 ஜூலை 2026, 5:25 am IST

திருநெல்வேலியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தில்லியில் நீட் தோ்வுக்கு எதிராக போராடும் மாணவா்கள், இளைஞா்களுக்கு ஆதரவாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி. ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள சத்தியமூா்த்தி பவனை பாஜகவினா் முற்றுகையிட முயன்றனா். இதைக் கண்டித்து திருநெல்வேலியில் உள்ள தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

இந்தப் பேரணிக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு, பட்டியலின பிரிவு மாநில தலைவா் ரஞ்சன் குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து கொக்கிரகுளம்-வண்ணாா்பேட்டை பிரதான சாலை வழியாக சுமாா் 50 போ் பாஜக அலுவலகம் நோக்கி முற்றுகையிடுவதற்காக சென்றபோது, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். தடையை மீறி பேரணி செல்ல முயன்றவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்தனா். இப்பேராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.