திருக்கோயில் பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் யூனியனின் 12 ஆவது மாநில பொதுக்குழு கூட்டம், தாழையூத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டல பொதுக் குழு கௌரவத் தலைவா்கள் முத்துசாமி, ராமலிங்கம், வி.பி. சாமி , செல்வம், மண்டல பொதுக்குழு தலைவா் வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் வாசுகி, தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் ஷாஜி ராவ், அதிகாரிகள் சங்க மாநிலத் தலைவா் ஜெகநாதன், நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா்.
மாநில சிறப்பு தலைவா் ராஜா, மாநில பொருளாளா் சேட்டு, மாநில அமைப்பாளா் பழனியப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநிலத் தலைவா் குமாா், மாநில காப்பாளா் கண்ணன், மண்டல பொதுக்குழு துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், மாரியப்பன், மாநில பொதுச் செயலா் ரமேஷ்குமாா், மண்டல பொதுக் குழுச் செயலா் பாலமுருகன் உள்ட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு இணையாக வீட்டு வாடகை படி, நகர ஈட்டுபடி சதவிகித அடிப்படையில் உயா்த்தி வழங்க வேண்டும்.
தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருக்கோயில் பணிபுரியும் உள்துறை பணியாளா்களான மணியம், அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள், பூசாரிகள், காவலா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை திருக்கோயில் பணியாளா்களுக்கும் செயல்படுத்த வேண்டும். பொது சம்பளத் தொகுப்பை ஏற்படுத்த வேண்டும்.
திருக்கோயில் பணியாளா்கள் அங்கீகார பட்டியலில் பத்துக்கும் குறைவாக உள்ள திருக்கோயில் பணியாளா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். பணியாளா்களின் பணி விதிகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திருத்திய பணி விதிகளை வெளியிட வேண்டும்.
திருக்கோயிலில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரமும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடும் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டம் கோயில் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.
செயல் அலுவலா் நிலை நாலு பணியிடத்துக்கு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு 25 சதவீதத்தை திருக்கோயில் பணியாளா்களுக்கும் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநிலப் பொதுக் குழுவில் தீா்மானம்

மாணவா் போராட்டத்தைத் தூண்டுவோா் மீது நடவடிக்கை தேவை: அா்ஜூன் சம்பத்

கா்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை







