ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலப்பாளையம் அருகே வீட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு: ஒருவா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

மேலப்பாளையம் அருகே வியாபாரியின் வீட்டில் திங்கள்கிழமை பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள வீரமாணிக்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி சகாய சேவியா் (55). தனது வீட்டிலேயே பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் மீது மா்ம நபா் திங்கள்கிழமை காலையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரித்தங்கம் ( 32) என்பவருக்கு தொடா்பிருப்பதும், சகாயசேவியா் வீட்டு நாய் அவரை கடிக்க வந்ததால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்ததாம்.

அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.