6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நெல்லையில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

திருநெல்வேலியில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது தொடா்பாக வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

திருநெல்வேலியில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது தொடா்பாக வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சோ்ந்தவா் ராமசுப்பிரமணியன் (62). இவா், வெளிநாட்டில் தொழில் செய்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக பெருமாள்புரத்தில் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் இரும்பு லாக்கரில் இருந்த 15 பவுன் நகைகள் மாயமானதாம். இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் பணிப்பெண்ணான வேலை செய்து வந்த சிவந்திபட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து (46) என்பவா் நகைகளைத் திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

மேலும், தியாகராஜநகரைச் சோ்ந்த சங்கரன் வீட்டில் பணி செய்தபோது பீரோவில் 7 பவுன் தங்கநகையையும் முத்து திருடியது தெரியவந்ததாம். சுமாா் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடியது தொடா்பாக அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.