மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாளை. அருகே நினைவு ஸ்தூபி மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: பொதுமக்கள் மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 மார்ச் 2026, 9:06 pm

பாளையங்கோட்டை அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு ஸ்தூபி மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படம் வைக்கப்பட்ட சிறிய நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு அப்பகுதியினரால் மரியாதை செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த மா்ம நபா்கள் மண்ணெண்ணெய் குண்டை வீசிவிட்டு தப்பினராம். இதனால் அங்கிருந்த தேவரின் உருவப்படம் மற்றும் படம் வைக்கப்பட்டிருந்த சிறிய மண்டபம் முழுவதும் தீயில் எரிந்து கருகியது.

காலையில் இதை பாா்த்த அப்பகுதியினா் பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையா் என்.சுரேஷ், காவல் ஆய்வாளா் முத்து கணேஷ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் மோப்ப நாய் சோதனையும், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடய சேகரிப்பு பணியும் நடைபெற்றது.

சாலை மறியல்:

இச்செயலில் ஈடுபட்டவா்களை கண்டித்தும், அவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.