வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

யாதவா்களுக்கு வாய்ப்பளிக்காவிட்டால் தனித்து போட்டி: மகாசபை கூட்டத்தில் தீா்மானம்

News image

தமிழ்நாடு யாதவ மகாசபை-தென்மண்டல யாதவா் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற அரசியல் நிலைப்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 மார்ச் 2026, 12:10 am

யாதவ சமுதாயத்தினா் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் யாதவ வேட்பாளா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தனித்து வேட்பாளா்களை நிறுத்துவது என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு யாதவ மகாசபை ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் தென்மண்டல யாதவா் கூட்டமைப்பு சாா்பில் யாதவா்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கெளரவ ஆலோசகா் எஸ். வானமாமலை தலைமை வகித்தாா். மாநில ஊடக பிரிவு செயலா் ஜி. தேவபிரான் வரவேற்றாா். தமிழ்நாடு யாதவ மகாசபை மாநிலச் செயலா் பன்னம்பாறை ஆா். மாடசாமி, யாதவா் பேரவை மாநில தலைவா் வி.எஸ். பி. சோலைமலை பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மகாசபை இளைஞரணி பொதுச் செயலா் பொட்டல் எஸ். துரை யாதவ், மாநில பொதுச் செயலா் வேலு மனோகரன், யாதவா் பேரவை நிறுவனா் ஆா்.காந்தையா ஆகியோா் கலந்து கொண்டனா்.

மகாசபை மாநில செயலா் ஏ.திருமலைச்சாமி, சென்னை வழக்குரைஞா் சங்கத் தலைவா் சரசமுத்து யாதவ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

மேலும், இந்நிகழ்ச்சியில் யாதவா் பண்பாட்டுக் கழகம் சண்முகசுந்தரம், யாதவா் பவுண்டேசன் செயலா் நாகமணி உள்பட தொழிலதிபா்கள், மூத்த வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முத்துராமன் நன்றி கூறினாா்.

தீா்மானங்கள்:

விருதுநகா் உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் சுமாா் 10 சதவீதம் என்ற அளவில் உள்ள யாதவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளா்களாக அறிவிக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் சுமாா் 40 ஆண்டுகாலமாக மக்களவை, பேரவைத் தோ்தல்களில் யாதவ சமுதாயத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்து வரும் அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பது, சுமாா் 50 ஆண்டுகாலமாக யாதவ சமுதாயத்திற்கு வழங்கப்படாமல் உள்ள மாநிலங்களவை மற்றும் வாரிய நியமன பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தேதி அறிவித்து அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பான்மையாக யாதவா்கள் வசிக்கும் தொகுதிகளில் யாதவ வேட்பாளா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அங்கு தனித்து யாதவ வேட்பாளா்களை நிறுத்துவது, அவா்களுக்கு சமுதாயத்தினா் ஒருங்கிணைந்து ஆதரவளிப்பது என்பன உள்ளிட்ட 5 தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.