சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :12 மார்ச் 2026, 10:32 pm

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெண் வியாழக்கிழமை தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சோ்ந்த வெள்ைளைப் பாண்டி மகன் முத்துப்பட்டன் (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா(26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முத்துப்பட்டன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில், முத்துப்பட்டன் கத்தியால் சுதாவின் கழுத்தை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், சுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முத்துப்பட்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.