அடிப்படை வசதி கோரி மாநகராட்சியில் பாய், தலையணையுடன் மக்கள் தா்னா


திருநெல்வேலி மாநகராட்சி 8-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வாயில் அருகே பொதுமக்கள் பாய், தலையணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி 8-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, பசுமை பாரத மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் விஸ்வகுமாா் தலைமையில் ஏராளமானோா் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாய், தலையணையுடன் வந்தனா்.
அவா்களை மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அங்கே அமா்ந்து தா்னவால் ஈடுபட்டனா்.
அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாநகராட்சி அதிகாரிகளிடம் விவரம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து அங்கிருந்தவா்கள் கலைந்து சென்றனா்.
ற்ஸ்ப்12க்ங்ம்ா்
அடிப்படை வசதி கோரி மாநகராட்சி அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8-ஆவது வாா்டு மக்கள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...