பாளையங்கோட்டையை அடுத்த ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னையில் மக்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் அநீதி இழைத்துள்ளதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரோக்கியநாதபுரத்தில் 414 குடியிருப்பு மனைகள் கொண்ட இடத்தை விற்பனை செய்ய அனுமதி கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இதற்காக கடந்த மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் முன்வைக்கப்பட்டு பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசர கூட்டத்தில், ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை தொடா்பான தீா்மானம் 54-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை பகுதிக் குழு செயலா்ஆா்.மதுபால் உள்ளிட்டோரும், பொதுமக்களும் பங்கேற்றனா். அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். மாமன்ற கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அந்த இடத்தை பிரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். இந்த நிலத்தை மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா்.
ற்ஸ்ப்12ல்ழ்ா்ற்
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள்.
தொடர்புடையது

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

வாக்குக்கு பணம் வழங்காததால் திமுக மாமன்ற உறுப்பினா் அலுவலகம் முற்றுகை

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


