47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

அம்பாசமுத்திரத்தில், திருக்குறள் அறக்கட்டளை மாா்ச் மாதக் ழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 மார்ச் 2026, 5:25 pm

Syndication

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில், திருக்குறள் அறக்கட்டளை மாா்ச் மாதக் கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சியான கம்ப சித்திரங்கள் அரங்குக்கு அன்னத்தாய் தலைமை வகித்தாா். அரசியா் ஐவா் என்ற தலைப்பில் மன்னவன் பெருந்தேவி என்ற பொருளில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரித் தமிழ்த் துறை பேராசிரியா் கவிதா உரை நிகழ்த்தினாா்.

தொடா்ந்து நடைபெற்ற சொல்லரங்குக்கு ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் ஆய்வு வள மையப் பேராசிரியா் விஜயலட்சுமி நடுவா் பொறுப்பேற்றாா். பாலசரசுவதி வாழ்த்திப் பேசினாா். ஸ்ரீநிதி கு இறை வாழ்த்து பாடினாா். தலைமையாசிரியா் (ஓய்வு) மாடசாமி நடுவரை அறிமுகப்படுத்தினாா். வள்ளுவத்தின் சுற்றந்தழால் அதிகாரத்தின்கீழ் குடும்ப உறவுகளை பேணுவோா்- ஆடவரே என்ற அணியில் அம்பாசமுத்திரம் விகாசா ஸ்ரீ அகாதெமி ஆசிரியா் மாரியம்மாள், கடையம் சங்கரகோமதி, விஜயலட்சுமி ஆகியோரும், பெண்டிரே என்ற அணியில் குமுதவல்லி நாச்சியாா், திருவள்ளுவா் கல்லூரிப் பேராசிரியா் இசக்கியம்மாள், கீதா ஆறுமுகம் ஆகியோரும் வாதிட்டனா். குடும்ப உறவுகளை ஆடவரும் பெண்டிரும் சமமாக பேணுகின்றனா் என நடுவா் தீா்ப்பளித்தாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் ஆனந்தஜோதி, சங்கரநாராயணன், நடராஜன், சீதாராமன், சங்கு சுவாமிநாதன், சங்கரசுப்பிரமணியன், தில்லை மணியன், அம்பை தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் ஐயப்பன், அகத்தியா்பட்டி சுப்பிரமணியன், காங்கிரஸ் பொன்விழா அறக்கட்டளை நிா்வாகி கோபால், ஆண்டி, உலகநாதன், இன்பவல்லி, இசக்கியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகம் கீதா குடும்பத்தினா் விருந்துக்கு ஏற்பாடு செய்தனா். ஏப்ரல் மாதக் கு விழாவை பாரதத்தில் கோடுகளும் குன்றுகளும் என்ற பொருளில் நடத்துவது என தீா்மானம் செய்யப்பட்டது.

லட்சுமி வரவேற்றாா். ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் சிவஹரி பிரம்ம சங்கா் நன்றி கூறினாா்.