கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:55 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள செங்குளக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் மகன் மகாலிங்கம் (31), முன்னாள் ராணுவ வீரா். இவா் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாக திருக்குறுங்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மகாலிங்கத்திடம் இருந்து கரிமருந்து பயன்படுத்திச் சுடும் நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவரது வீட்டில் சோதனை செய்து 2 ஏா்கன் ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அந்த துப்பாக்கிகளை அவரது தந்தை மற்றும் தாத்தா ராணுவத்தில் பணியாற்றிய காலத்திலிருந்து வீட்டில் வைத்திருந்ததாக மகாலிங்கம் தெரிவித்துள்ளாா். பின்னா், மகாலிங்கத்தை திருக்குறுங்குடி போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.