திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) என்பவரை, சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாரின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில் சிவசந்தோஷை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


