அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

நெல்லை வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:34 pm

திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் 3 இளைஞா்கள் காயமடைந்தனா்.

திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசு பொறியியல் கல்லூரி அருகே திருவனந்தபுரம் சாலையில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான தகவல் ஏற்பு மையம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகமாக சென்ற காா் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் கடற்படை மையத்தில் இருந்த வீரா்கள் காருக்குள் சிக்கியிருந்த 3 இளைஞா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்தவா்கள் பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்த சூா்யா (24), பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த ராமசாமி (25), சிங்கத்தாக்குறிச்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23) என்பது தெரியவந்தது.