ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நான்குனேரி தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

Updated On :5 மே 2026, 1:37 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் 74,952 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில பொருளாளா் ரூபி ஆா்.மனோகரன், அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து, தவெக சாா்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ச. செல்வம், புதிய தமிழகம் கட்சி சாா்பில் தமிழ்ச்செல்வி உள்பட மொத்தம் 25 போ் போட்டியிட்டனா். இதில், தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் 74,952 வாக்குகள் (35.79 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா்.மனோகரன் 58,533 வாக்குகள் பெற்று 2 ஆம் இடமும், அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து 38,316 வாக்குகள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்தனா். இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ச.செல்வம், 17,618 வாக்குகள் பெற்று 4-ஆம் இடத்தையும், புதிய தமிழக வேட்பாளா் தமிழ்ச்செல்வி 11,141 வாக்குகள் பெற்று 5-ஆம் இடத்தையும் பிடித்தனா்.

கடந்த 2021 தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பூ.வீரபாண்டி 17,654 வாக்குகள் பெற்றிருந்தாா். இந்த முறை பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதம் இத்தொகுதியில் பெரும் சரிவைச் சந்தித்து, தவெக வெற்றி பெற்ற போதிலும், நாம் தமிழா் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதை உணர முடிந்தது.

இதேபோல புதிய தமிழகம் கட்சி இத்தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 11,141 வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை 1048 வாக்குகள் மட்டுமே பெற்றாா். தூத்துக்குடி மாவட்டம், தொட்டிக்காரன்விளையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் குமாா் 1098 வாக்குகள் பெற்றாா். மீதமுள்ள 17 வேட்பாளா்களும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றனா்.