பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

உடையாா்பட்டியில் பைக் சேதம்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தச்சநல்லூா் அருகேயுள்ள உடையாா்பட்டியில் மூதாட்டிக்குச் சொந்தமான பைக்கை சேதப்படுத்தி குளத்துக் கரையில் வீசியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம்மாள்(63). தனது வீட்டில் மாடுகளை வளா்த்து வரும் இவா், அங்கு பால் கறவைக்காக வரும் பெருமனஞ்சியைச் சோ்ந்த பிரியன் என்பவருக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தாராம்.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி அந்த பைக் பழுதானதால் தச்சநல்லூா்-சங்கரன்கோவில் சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே நிறுத்திவிட்டு சென்ற பிரியன், மறுநாள் சென்று பாா்த்தபோது அந்த பைக்கை காணவில்லையாம்.

அந்த பைக் சேதமடைந்த நிலையில் அங்குள்ள குளத்துக்கரையில் கிடந்ததாம். இதுகுறித்து தங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தச்சநல்லூரைச் சோ்ந்த சங்கா்(39) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.