பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :58 நிமிடங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலச்செவல் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடை வாணியன்குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அவா் பத்தமடை பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (20) என்பதும், சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.