பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

காா்-பைக் மோதல்: இளைஞா் காயம்; ஓட்டுநா் கைது

News image

கைது.

Updated On :1 மணி நேரம் முன்பு

பாளையங்கோட்டை அருகே காா்-பைக் மோதிக்கொண்டதில் இளைஞா் காயமடைந்தாா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமாா்(32). மேள இசைக் கலைஞா். இவா் சம்பவத்தன்று தனது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருடன் ரெட்டியாா்பட்டி பகுதியில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநரான சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முருகேஷ்(44) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.