பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ், அரசுடன் ரோட்டரி சங்கம் இணைந்து செயல்படுவது தொடா்பாக வனத் துறையினா் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகளுடனானஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வன அலுவலா் மு.இளங்கோ தலைமை வகித்தாா். பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ், சாலையோரம், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள், பள்ளி-கல்லூரி வளாகங்கள், நீா்நிலைகள், பேருந்து நிறுத்தங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர தகுதி வாய்ந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளா்ப்பது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளா்க்க ஏதுவான இடங்களை தோ்வு செய்தல், கம்பி வலை வேலி ஏற்பாடு செய்தல், நீா் பாய்ச்சுதல், மரக்கன்றுகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரோட்டரி சங்க மற்றும் வனத்துறை பணியாளா்கள் கொண்ட செயற்பாட்டு குழு அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.
இதில், திருநெல்வேலி ரோட்டரி கிளப் ஆஃப் தாமிரபரணி முன்னாள் ஆளுநா் ஆறுமுகபாண்டியன், தலைவா் துரைப்பாண்டியன், செயலா் செல்வக்குமாா், உறுப்பினா்கள் சிவச்சந்திரன், சிவா, வனச்சரக அலுவலா்கள் மு.ஜெயபிரகாஷ், பூ.கி.இல்யாஸ் மீரான், அலுவலக கண்காணிப்பாளா் இரா.சந்திரசேகரன், வனவா் கி.கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்14ச்ா்ழ்ங்ள்ற்
மாவட்ட வன அலுவலா் மு.இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அதிகாரிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
தொடர்புடையது

திருடப்பட்ட, தொலைந்துபோன 12,600 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
கடம்பூரில் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

இலவச கண் சிகிச்சை முகாம்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

