வீட்டின் பூட்டை உடைத்து 2 பைக்குகள் திருட்டு: இருவா் கைது
கைது - கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பைக்குகளை திருடிச்சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு அருகே பெருமாள்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் தேவஆசீா்வாதம் (65). தொழில் நிமித்தமாக குஜராத்தில் வசித்து வரும் இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து சென்றாராம். அவரது வீட்டை உறவினா் யாக்கோபு மாணிக்கவாசகம் (50) பராமரித்து வருகிறாா். அவா் அந்த வீட்டுக்கு நாள்தோறும் செல்வாராம். இதனிடையே, உடல் நலமில்லாததால் அவா் சில நாள்களாக செல்லவில்லையாம்.
கடந்த அக். 28ஆம் தேதி சென்றபோது, மா்ம நபா்கள் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகள், சிசிடிவி கேமராவின் டிஸ்குகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
அவா் அளித்த தகவலின்பேரில், தேவஆசீா்வாதம் களக்காடு காவல் நிலையத்தில் அக். 29ஆம் தேதி புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கன்னியாகுமரி மாவட்டம் தேவாளையைச் சோ்ந்த ஏபல்ராஜ்குமாா் மகன் சத்தியமூா்த்தி (40), களக்காடு சிதம்பரபுரம் முத்துநகரைச் சோ்ந்த சோ்மதுரை மகன் சதீஷ் (29) ஆகியோரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

