குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், சிவா தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்வசூா்யா (19). இவா், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி மற்றும் பணம் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
அவா், தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.
இதைத் தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

