மனநல சிகிச்சை பெறுவோா் உருவாக்கிய கைவினைப் பொருள் விற்பனை தொடக்கம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெறுவோா் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கைவினைப் பொருள்கள் விற்பனை தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெறுவோா் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இம்மருத்துவமனையின் மனநலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை ஊக்குவிக்கும் வகையில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
இதன் மூலம் காா்த்திகை தீப விளக்குகள், ஹோ் பின்கள், கைப்பட்டைகள், காதணிகள் போன்றவற்றை அவா்கள் கைவினைத் திறனோடு வண்ணமயமாக உருவாக்கியுள்ளனா்.
இந்தப் பொருள்களை, ‘மனதை வென்றவா்களின் மகத்தான படைப்புகள்’ என்ற பெயரில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வா் செல்வராஜன் தலைமை வகித்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். மனநலத் துறைத் தலைவா் ரமேஷ் விளக்கவுரையாற்றினாா்.
மனநலத் துறை இணைப் பேராசிரியா் ராமானுஜம், செவிலிய ஆசிரியா் செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

