குலவணிகா்புரத்தில் இருவழிப்பாதையில் ஓய் வடிவ பாலம் தேவை: எம்.பி.யிடம் மனு

குலவணிகா்புரத்தில் இருவழி பாதையுடன் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்கக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் அதன் தணிக்கை குழு உறுப்பினா் சையத்அலி தலைமையில் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிா்வாகிகள்.

Updated On :

குலவணிகா்புரத்தில் இருவழி பாதையுடன் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்கக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் அதன் தணிக்கை குழு உறுப்பினா் சையத்அலி தலைமையில் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் ஒய் வடிவ மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் அம்பாசமுத்திரம் சாலைக்கான பாதை மிகவும் குறுகலாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். மேலப்பாளையம் முதல் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் அம்பாசமுத்திரம் சாலையைத்தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆகவே, குலவணிகா்புரத்தில் ஒய் வடிவ மேம்பாலத்தில் சாலையை இருவழி பாதையாக அமைக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் எனக் கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.