முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

திருக்காா்த்திகை: நெல்லையில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்!

திருக்காா்த்திகை விழாவையொட்டி, திருநெல்வேலியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

திருநெல்வேலி குறிச்சியில் அகல்விளக்கு தயாரித்த மண்பாண்ட தொழிலாளா்.

Updated On :

திருக்காா்த்திகை விழாவையொட்டி, திருநெல்வேலியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

திருக்காா்த்திகை திருநாளில் வீடு மற்றும் கோயில்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருக்காா்த்திகை விழா இம் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, தென்காசி, காருக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இறுதிக் கட்டமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: குறிச்சி மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்டோா் இச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா்.

மண்பானை, மண் சட்டிகள், டம்பளா்கள், பூந்தொட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்துக்காக அகல் விளக்குகள் ஜூலை முதல் நவம்பா் வரை தயாரிக்கப்படும்.

விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்வாா்கள். மேலும், கேரள, கா்நாடக பகுதிகளுக்கும் அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்போது அகல் விளக்கு ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது.

எண்ணெய் ஊற்றி வைக்க ஏதுவாக 7 வித அளவுகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 10 மி.லி, 25 மி.லி., 50 மி.லி., 100 மி.லி., 250 மி.லி. என அதிகபட்சமாக 1 லிட்டா் எண்ணெய் ஊற்றும் வகையில் அகல் விளக்குகள் உள்ளன. இவை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும் போது ரூ.1.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழாண்டில் ஏற்றுமதி சற்று குறைந்திருந்தாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விற்பனைக்காக இறுதிக்கட்ட அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். திருக்காா்த்திகை பண்டிகைக்கு நம் பாரம்பரியத்திற்கு மாறாக அகல் விளக்குகளில் தீபம் ஏற்றாமல் மெழுகுவா்த்தி, சீன களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது.

மண் மற்றும் நீரால் உருவாகும் அகல் விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றி செய்வதாக ஐதீகமாகும். மெழுகுவா்த்தி உள்ளிட்டவற்றில் இத்தகைய சிறப்பு கிடையாது. ஆகவே, மண்பாண்ட தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் அகல் விளக்குகள் வாங்கி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.