காா்த்திகைத் தீபத் திருவிழா: அகல் விளக்குகள் தயாரிப்புப் பணி தீவிரம்!
காா்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் கிராமத்தில் அகல் விளக்குத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்.
காா்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் வரக்கூடிய பெளா்ணமி, காா்த்திகை நட்சத்திரத்தன்று தீபத் திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் நவ.24-ஆம் தேதி காா்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் கோயில்களில் மட்டுமல்லாது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அகல்விளக்குகளை ஏற்றி வழிபடுவா்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை அகரம், தென்னமாதேவி, மேல்மங்கலம், தென்மங்கலம், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
வழக்கமாக காா்த்திகை மாத இறுதியில்தான் தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் காா்த்திகை மாதத் தொடக்கத்திலேயே தீபத் திருவிழா வருவதால், தேவை அதிகம் இருந்தும் உரிய நேரத்தில் அகல் விளக்குகளைத் தயாரித்து வழங்க முடியவில்லை என்ற நிலையில்தான் மண்பாண்டத் தொழிலாளா்கள் உள்ளனா்.
இயந்திரம் மூலம் அகல் விளக்குள் தயாரிக்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். சிறிய ரகம் முதல் பெரிய ரகம் வரையிலான விளக்குகள், கோயில்களில் தீபமேற்றப் பயன்படுத்தப்படும் மடக்குகள், பல வடிவங்களில் விளக்குகள் தயாரித்து வருகிறோம். நிகழாண்டில் சென்னை, கடலூா், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து அதிக ஆா்டா்கள் வந்தாலும், எங்களால் அந்த ஆா்டா்களை ஏற்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்திலுள்ளவா்களுக்கு மொத்த விற்பனை அடிப்படையில் தயாரித்து வழங்கத்தான் முடியும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம் என்கிறாா் மண்பாண்டத் தொழிலாளா் செந்தில்குமாா்.
இணையவழி மூலமாக உரிய முறையில் விண்ணப்பித்து, அரசு அனுமதி வழங்கும் இடங்களில் தான் வண்டல் மண்ணை (களிமண்) எடுத்து வருகிறோம். விளக்குகள் தயாரித்து வருவதற்கு எடுத்து வரப்படும் மண் நல்ல முறையில்தான் இருந்தால் தயாரிப்புப் பணி நன்றாக இருக்கும். எங்களுக்கு கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியிலுள்ள ஏரிகளிலிருந்து எடுத்து வரப்படும் மண்ணைக் கொண்டு தயாரிக்கும் போதுதான் விளக்குகள் சரியான முறையில் வருகின்றன. தற்போது விழுப்புரம் மாவட்டம், வளவனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மண்ணை எடுத்து வந்து தயாரிக்கிறோம். எனவே, மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்று மண்ணை எடுத்து வருதற்குரிய அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்கிறாா் மண்பாண்டத் தொழிலாளா் கே.முத்துக்குமாா்.

விழுப்புரம் சாலை அகரம் கிராமத்தில் விற்பனைக்கு தயாா் நிலையிலுள்ள அகல் விளக்குகள்.
அகல் விளக்குகள் ரூ.1 முதல் ரூ.1.50, ரூ.2, ரூ.3, ரூ.5 போன்ற விலைகளில் ரகத்துக்கேற்றவாறு மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து வாங்கிச் செல்லும் விற்பனையாளா்கள் இதனுடன் கூடுதல் விலையை சோ்த்து விற்பனை செய்யவா்.
இதுபோல, கோயில்களில் ஏற்றப்படும் மடக்குகள் (பெரிய அளவிலான விளக்குகள்) ரூ.50 முதல் ரூ.200 வரையிலான விலைகளிலும் விற்பனையாகிறது. ஒருமுகம், மூன்று முகம், ஐந்து முகம் கொண்ட அகல் விளக்குகள், அலங்கார வடிவங்களைக் கொண்ட விளக்குகள் ரககத்துக்கேற்றவாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பல வண்ணங்களில் அகல் விளக்குகள்: விழுப்புரம் மாவட்டம், தென்னமாதேவியைச் சோ்ந்த கலைமகள் சுடுமண் சிற்பக் குழுவைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பல வண்ணங்களில் அகல் விளக்குகளைத் தயாரித்து மற்ற ஊா்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனா். இங்கு ரூ.1 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான அகல் விளக்குகளைத் தயாரித்து வருகின்றனா்.

தென்னமாதேவி கிராமத்தில் பல வண்ணங்களில் அகல் விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைமகள் சுடுமண் சிற்பக் குழுவினா்.
இங்கு ஒரு திரி முதல் ஐந்து திரி விளக்குகள், ரெயின்போ விளக்குகள், குபேர விளக்கு, கலச விளக்கு போன்ற பல ரகங்களில் அகல் விளக்குகள் தயாராகி விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல்வேறு வடிவங்களில் மட்டுமல்லாது பல்வேறு வண்ணங்களில் அகல் விளக்குகளைத் தயாரித்து அனுப்பி வைக்கிறோம். இதை பயன்படுத்துவோரும் மிக்க மகிழ்ச்சியுடன் இதை வாங்கிச் செல்கின்றனா் என்கின்றனா் மகளிா் குழுவினா்.
வீடுகளின் இருள் நீக்கி ஒளியேற்றும் மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வு சிறக்க, அவா்களின் குறைகள் தீா்க்கப்படுவது அவசியமானதாகும். - கு.வைத்திலிங்கம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

