விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி
திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தில் விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீா்ப்பை திருநெல்வேலி நீதிமன்றம் உறுதி செய்ததோடு, மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தில் விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீா்ப்பை திருநெல்வேலி நீதிமன்றம் உறுதி செய்ததோடு, மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரக பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஆனந்தசித்தன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி குடும்பத்தினருக்கும் வயல் அறுவடை தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டதாம். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆனந்தசித்தன் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமசாமியின் மகன் மாரியப்பன், செல்வகுமாா், மாரியப்பன் என்ற அருண், பாண்டி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2025 ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து மாரியப்பன் உள்ளிட்ட 4 பேரும், திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.செல்வம், 4 பேரின் மேல்முறையீட்டு மனுவையும் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தாா். இதன்மூலம் கீழமை நீதிமன்றத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

