கால்நடை கல்லூரிக்கு களப்பயணம் சென்ற பள்ளி மாணவா்கள்
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு பள்ளி மாணவா்கள் களப்பயணம் சென்றனா்.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு களப்பயணம் சென்று பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள்.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு பள்ளி மாணவா்கள் களப்பயணம் சென்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களிடையே உயா்கல்வி குறித்த ஆா்வத்தையும் விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் நோக்கில் 43 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,000 மாணவா்களுக்கு உயா்கல்வி நிறுவனங்களை நேரில் பாா்வையிடும் வகையில் கல்லூரி களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மானூா் வட்டாரத்தைச் சோ்ந்த கங்கைகொண்டான், பாலாமடை, மானூா், வடக்கு செழியநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து சுமாா் 200 மாணவா்கள், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு ஆசிரியா்கள் களப்பயணம் மேற்கொண்டனா்.
மாணவா்கள் கல்லூரியின் பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், கால்நடை மருத்துவ வளாகம், அருங்காட்சியகம் மற்றும் கால்நடைப் பண்ணைப் பிரிவுகளைப் பாா்வையிட்டனா்.
கால்நடை மருத்துவச் சேவைகள், விலங்கு நலன், ‘ஒரே நலம்‘ அணுகுமுறை, இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பிற்கான மாணவா் சோ்க்கை முறை மற்றும் கால்நடை துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேராசிரியா்கள் விளக்கமளித்து, மாணவா்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தனா்.
ஏற்பாடுகளை திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை விரிவாக்கக் கல்வித் துறையினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

