கால்நடை மருத்துவக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவா்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் வகையில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் ‘ஒரு மாணவா் - ஒரு மரம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சூ. கி. எட்வின் தொடங்கி வைத்தாா். 100 மாணவா்கள் மூலம் 100 மரங்கள் உள்பட மொத்தம் 110 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் ஒரே நாளில் நடப்பட்டன. மரக்கன்றுகள் திருநெல்வேலி மாவட்ட வனத்துறை சாா்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாளா் ஞா. ராஜேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ம. பூபதி ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

