தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

நெல்லை கால்வாயை தூா்வாரும் பணி தொடக்கம்

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.

கால்வாய் தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.

வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க உள்ளதையொட்டி கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றை சீரமைத்து மழைநீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் திருநெல்வேலி பிரதான கால்வாயை தூா்வாரும் பணியை கரையிருப்பு பகுதியில் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இப்பணியானது தச்சநல்லூரில் தொடங்கி குறிச்சிகுளம் வரை சுமாா் 4 கி.மீ. தூரம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவா் (ஆலை) ம.செந்தில், மேல் தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) தங்கராஜ், திருநெல்வேலி வட்டாட்சியா் மாரிமுத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.